வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:31 IST)

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய சதீஷ்… புது கோபி இவருதானா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் கோபி கதாபாத்திரம் சமூகவலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு மீம் மெட்டீரியல் ஆகியுள்ளது. இந்த சீரியலில் கோபி பாக்யாவை திருமணம் செய்துகொண்டும், ராதிகாவைக் காதலித்துக் கொண்டும் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு தரப்பிற்கும் தெரியாமல் கோபி தில்லு முல்லு வேலைகள் செய்து தப்பித்து வந்தார்.

அவரின் கதாபாத்திரத்தை ஒட்டி ஏகப்பட்ட மீம்ஸ்களும், ட்ரோல் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக கோபியாக நடித்திருந்த சதீஷ் கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் அதிருப்தியான ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் இனிமேல் கோபி கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் பப்லூ பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.