1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Vijay sethupathi mahaaraaja movie satellite rights sold out

விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்கம் நித்திலன்
விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிந்தாலும் இந்த படம் ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருப்பதே ரிலீஸ் தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை  விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூரவ்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் கூடிய விரைவில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
இந்தாங்க இன்னொரு 100 கோடி வசூல் படம்… தொடர்ந்து கலக்கும் மலையாள படவுலகு!