வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (18:03 IST)

வாரேன் வரேன் சீமராஜா! சிவா ரசிகர்களுக்கு இன்று விருந்து

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா. இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் சிம்ரன், சூரி,நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்த படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி (விநாயகர் சதுர்த்தி) அன்று வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோன்று நேற்று வெளியான மச்சக்கன்னி, பராக் பராக் பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.
 
இந்நிலையில் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு என அமைக்கப்பட்டுள்ள 'வாரேன் வாரேன்' பாடலை இசையமைப்பாளர் இமான் இன்று மாலை 7 அளவில் வெளியிடுகிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.