மகா ஜனங்களே! சீமராஜா பயாஸ்கோப் வண்டி வருது....

VM| Last Modified வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (14:19 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தை விளம்பரப்படுத்த பயோஸ்கோப் வண்டியை படக்குழு பயன்படுத்தியுள்ளது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ள படம் சீமராஜா. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நெல்லை சீமையின் ராஜாவாக நடித்துள்ளார். சிம்ரன் வில்லியாகவும் சமந்தா டீச்சராகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை  பாடல்களும், ட்ரெய்லர்களும் ஏற்கனவே அதிகரித்துள்ளன. விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாக உள்ளது.  
இந்நிலையில் சீமராஜா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க படத்தை உருவாக்கிய 24ஏஎம் ஸ்டுடியா புதிய யுக்தியை கையாண்டு உள்ளது.  சீமராஜா படத்துடன் பழங்கால பயோஸ்கோப் பொருத்தி டெம்போ வேன்கள் தமிழகம், பாண்டிச்சேரியை சுற்ற விட்டுள்ளது. இந்த வண்டியின் மூலம் சீமராஜா படத்தின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை பார்த்து ரசிக்க முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :