சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாகும் ரியோ

rio
VM| Last Modified வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (16:36 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிரபல சீரியல் நடிகர் ரியோ ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறியிருக்கும் படம் 'கனா'. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகர், நடிகர் அருண் ராஜா இயக்கும் இப்படத்தில் நடிகை ஜஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
இந்தபடத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
 
இதில் பேசிய சிவகார்த்திகேயன் தான் தயாரிக்கும் புதிய படம் குறித்து அறிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரபல தொகுப்பாளர் மற்றும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ ராஜ் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.


இதில் மேலும் படிக்கவும் :