செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 ஜூன் 2021 (08:11 IST)

அஜித்தை இதுவரை பாக்காத கெட்டப்பில் பார்க்கலாம்… வலிமை நடிகை அப்டேட்!

வலிமை படத்தில் நடித்துள்ள நடிகை சங்கீதா அந்த படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்த நிலையில் கொரோனா காரணமாக அதுவும் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது படத்தை பற்றிய அப்டேட் ஒன்றை அந்த படத்தில் நடித்துள்ள நடிகை சங்கீதா வெளியிட்டுள்ளார். அதில் ‘இதுவரை இல்லாத கெட்டப்பில் அஜித்தை இந்த படத்தில் பார்க்கலாம்.  10 முதல் 15 எடையைக் குறைத்து இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.