செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:28 IST)

பிக்பாஸ் 4வது சீசனில் கமல்ஹாசனை இயக்குவது சாண்டியா? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் 4வது சீசனில் கமல்ஹாசனை இயக்குவது சாண்டியா?
பிக்பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அக்டோபர் 10ஆம் தேதி போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடக்கலாம் என்றும் 11ஆம் தேதியில் இருந்து முதல்நாள் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 புரோமோ வீடியோக்களை கமலஹாசன் வெளியிட்டார் என்பதும் இந்த இரண்டு வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக இரண்டாவதாக கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் கமல் நடனமாடியதோடு இந்த வீடியோ தொடங்குவதும் அதன் பின்னர் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த காட்சிகளும், இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த வீடியோவின் ஆரம்பத்தில் வரும் கமலின் நடன நிகழ்ச்சிக்கு நடன இயக்குனராக சாண்டி பணிபுரிந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தையும் சாண்டி தனது இன்ஸாகிராம் பதிவு செய்துள்ளார். இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது கமலஹாசனின் சிறிய அளவிலான நடனம் வரும் என்றும் அந்த நடனங்கள் முழுவதுமே சாண்டி தான் இயக்கப்போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
கடந்த சீசனில் போட்டியாளராகவும் இந்த சீசனில் கமல்ஹாசனுக்கு நடன இயக்குனராகவும் சாண்டி பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது