ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2023 (19:20 IST)

#RipCheems மீம்ஸ் மூலம் பிரபலமான சீம்ஸ் என்ற நாய் உயிரிழப்பு...

Chemms
ஷீபா இனத்தைச் சேர்ந்த பால்ட்சீ என்ற நாய் உயிரிழந்த நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த நாய்க்கு  இரங்கல் கூறி வருகின்றனர்

சமூக வலைதளங்களில்  மீம்ஸ்களில் ஷீபா இனத்தைச் சேர்ந்த பால்ட்சீ என்ற நாயின் முகமும் நெட்டிசன்களிடையே பிரபலம்.

சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  சீம்ஸ்  என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்டு வந்த பால்ட்சீ நாய்  நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனால், மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த நாய்க்கு  இரங்கல் கூறி வருகின்றனர். இதுகுறித்து உலகம் முழுவதும் இந்த நாய்க்கு ரசிகர்கள் உள்ள நிலையில் டுவிட்டரில் #RipCheems என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு வருகின்றனர்.