வாழ்நாள் முழுவதும் லாக்டவுன்.... சயீஷா வெளியிட்ட புகைப்படம்!
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் பா.இரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் பிரபலங்களுக்குள் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆம், சயீஷா தனது இன்ஸ்டாவில் ஆர்யாவுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படமொன்றை வெளியிட்டு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதற்குமாக லாக் செய்து கொண்டோம்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த அழகிய ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.