செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2020 (19:49 IST)

இப்போதைக்கு கர்ப்பம் இல்லை: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சாயிஷா

நடிகர் ஆர்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை சாயிஷா, திடீரென கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால்தான் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் வீடியோவில் நடன அசைவுகள் குறைவான வீடியோவை வெளியிடுவதாகவும் மேலும் கர்ப்பமான வயிறு தெரியாமல் இருப்பதற்காக தொளதொள ஆடையை அணிவதாகவும் சமூக வலைதள பயனாளர்கள் செய்திகளை வெளியிட்டு வந்தனர் 
 
இந்த தகவலுக்கு ஏற்கனவே சாயிஷாவின் தாயார் விளக்கமளித்தார் என்பது தெரிந்தது.  சாயிஷா கர்ப்பம் என்பது பொய்யான தகவல் என்றும் வதந்தி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சாயிஷாவே தற்போது இதுகுறித்து கூறிய போது தான் கர்ப்பமாக இல்லை என்றும் தான் கர்ப்பமாக இருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தான் நடித்து வரும் ’யுவரத்னா’ என்ற படத்தின் நடனத்திற்காக தான் தற்போது பயிற்சி பெற்று வருவதாகவும் இந்த நடனம் இதுவரை இல்லாத வகையில் மிக வேகமான அசைவுகள் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்யாவுடன் சாயிஷா, நடித்த ’டெடி’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது