1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (20:59 IST)

ஆர்யாவை பார்த்தாலே என் மனது வலிக்கிறது: சாயிஷாவின் வேதனை டுவிட்

நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக தான் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவது குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அவரது வயிற்றில் ஒருவர் கட்டையால் அடிக்கிறார். கட்டையால் அடி வாங்கிக்கொண்டு சிரித்தபடியே ஆர்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா ’ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு கடினமாக உழைக்கும் உங்களைப் பார்த்தால் என் மனது வலிக்கிறது என்று டுவிட் செய்துள்ளார் சாயிஷாவின் இந்த ட்விட்டர் போது வைரலாகி வருகிறது
 
இந்த நிலையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ’சல்பேட்டா’ என்ற திரைப்படத்தில் ஆர்யா நடிக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்தில் அவர் குத்துச்சண்டை வீரராக நடிக்க இருப்பதால் அந்த கேரக்டருக்காக தயார்படுத்தும் வகையில் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் அவர் உடற்பயிற்சி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்த ‘டெடி’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.