செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (18:22 IST)

ஸ்டாலினுக்கும் பினரயி விஜயனுக்கும் கடும் போட்டி: சத்யராஜ்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கும், கேரள முதல்வர் பினரயி விஜயன் இடையே யார் சிறந்தவர் என்பதில் கடும் போட்டி நடைபெற்று வருவதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு நூலான உங்களில் ஒருவன் என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது
 
 இந்த விழாவில் ராகுல் காந்தி, வைரமுத்து, தேஜஸ்வி, உமர் அப்துல்லா, கனிமொழி, சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த விழாவில் சத்யராஜ் பேசிய போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் கேரள முதல்வரும் பினராயி விஜயன் அவர்களுக்கும் யார் சிறந்த முதல்வர் என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்த கட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது