வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (11:44 IST)

ஸ்டாலின் பிறந்தநாள்: புதுச்சேரியில் இலவச பேருந்து சேவை!

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா இலவச பேருந்து சேவையை புதுச்சேரியில் தொடங்கி வைத்தார். 

 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. நகர்ப்புற தேர்தல் வெற்றி தமிழக மக்கள் எனக்கு அளித்த பிறந்தநாள் பரிசு என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் எனது பிறந்தநாளை தொண்டர்கள் ஆடம்பரம் இல்லாமல் பயனுள்ள வகையில் நலத்திட்டங்களை வழங்குங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா இலவச பேருந்து சேவையை புதுச்சேரியில் தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைத்தால் தமிழகத்தை போல அங்கும் பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என கூறியிருந்த நிலையில் இன்று புதுச்சேரி - பாகூர் தனியார் பேருந்தில் பொதும்க்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.