வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (07:46 IST)

காதல் மன்னன் சத்யராஜ் மகன் காதலுக்கு ஏற்படுத்தும் சிக்கல் – எப்படி இருக்கு ‘My Perfect Husband’ டிரைலர்!

ரெட்டசுழி மற்றும் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, தர்ஷன் ஆகியோர் நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்காக உருவாக்கப்பட்ட வெப் தொடர் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட். ஆனால் இந்த தொடர் பாதி முடிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இதனால் மீதித் தொடரை இயக்குனர் சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கி முடித்தார். இப்போது எல்லாப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் இந்த சீரிஸ் விரைவில்  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. நகைச்சுவை கலந்த குடும்ப வெப் தொடராக இந்த தொடர் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சத்யராஜின் பழைய காதலியின் மகளை தன் மகன் இப்போது காதலிக்க அதனால் குடும்பத்துக்குள் ஏற்படும் குழப்பங்களே இந்த சீரிஸின் கதை என்பது தெரிய வருகிறது. விரைவில் 10 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் தென்னிந்திய மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.