செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (09:31 IST)

டீசண்ட்டான முதல் நாள் ஓப்பனிங்… பிக்கப் ஆகுமா பிரசாந்தின் அந்தகன்?

பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் இன்று அதிக திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக். நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தகன் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நேற்று இரவுக் காட்சிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிக ரசிகர்களை தியேட்டர் நோக்கி வரவழைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் 50 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வார விடுமுறை நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது. அதனால் அந்தகன் பிரசாந்துக்கு நிச்சயமாக ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது.