திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (02:01 IST)

பின்னணி பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் விருது

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கேரள அரசின் சார்பில் ஹரிவராசனம் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருதை பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பின்னணி பாடகி சித்ராவுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விருதை இதுவரை ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், ஜயன், எஸ்பி பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வரும் ஜனவரி 14ஆம் தேதி சபரிமலையில் மகரபூஜை நடைபெறும் தினத்தில் சித்ராவுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதுடன் அவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகி சித்ரா ஏற்கனவே ஆறு முறை தேசிய விருதையும், ஆறு முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.