1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (11:15 IST)

சீனாவில் வெளியாகாதா ‘பாகுபலி 2’?

‘பாகுபலி 2’ படம் சீனாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸான படம் ‘பாகுபலி 2’. பிரபாஸ், ரானா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
மிகப்பெரிய வரலாற்றுப் படமான இது, இந்திய அளவில் இதுவரை எந்தப் படமும் வசூலிக்காத தொகையை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 1700 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்தப் படம், ‘தங்கல்’ படத்தின் சீன வசூல் சாதனையையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், ‘பாகுபலி  2’ படத்தை சீனாவில் வெளியிட இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால், ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் வெளியிட அனுமதி கிடைத்துள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை ஜப்பானிலும், அடுத்த வருட தொடக்கத்தில் ரஷ்யாவிலும் இந்தப் படம் ரிலீஸாகிறது.