1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (22:30 IST)

அஜித்தின் இடத்தை சமமாக பகிர்ந்து கொண்ட சத்யராஜ்-ஆதி

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இந்த படத்தால் நல்ல லாபம் கிடைத்துள்ளதால் உடனே அடுத்த படம் குறித்த வேலையில் இறங்கிவிட்டது. ஆனால் இம்முறை இந்த நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.



 
 
ஒரு படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இந்த படத்தை 'குற்றம் கடிதல்' கதாசிரியரும், இன்னொரு படத்தின் முக்கிய வேடத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க இந்த படத்தை 'காக்கா முட்டை' கதாசிரியரும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் இந்த இரண்டு படங்களின் மொத்த பட்ஜெட் 'விவேகம்' படத்தின் பட்ஜெட்டில் வெறும் 30% தான் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் அஜித்தின் இடத்தை இந்த இருவரும் பகிர்ந்து கொண்டதாகவே கூறப்படுகிறது.