கமலும் இல்லை, அஜித்தும் இல்லை: ஷங்கரின் அடுத்த ஹீரோ விக்ரம்?
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித் 'முதல்வன் 2' படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இல்லை இல்லை அவருடைய அடுத்த படத்தில் கமல் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஷங்கரின் வட்டாரங்கள் இதுகுறித்து தெரிவித்தபோது 'கமலுடன் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான், ஆனால் அவர் கட்சி ஆரம்பித்து முழு அரசியலில் ஈடுபட போவதால் ஷங்கர் ஒதுங்கிவிட்டார். அதேபோல் அஜித்துடன் ஷங்கர் இணைந்து பணியாற்றப்போவதும் உண்மைதான். ஆனால் அது அடுத்த படம் இல்லை என்று கூறினர்.
மேலும் ஷங்கர் தனது அடுத்த படத்தில் விக்ரமை நடிக்க வைப்பார் என்றும் அது அனேகமாக 'அன்னியன் 2' படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.