திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (20:07 IST)

’சுல்தான்’ டிக்கெட் ரிசர்வ் செய்தால் சிறப்பு சலுகை: ஏஜிஎஸ் அறிவிப்பு!

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து  தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் ரிசர்வேஷன் இன்று முதல் 7 மணி முதல் தொடங்க உள்ளது என்பதும் ஏராளமானோர் இந்த படத்திற்கு ரிசர்வேஷன் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏஜிஎஸ் திரையரங்கில் ’சுல்தான்’ படத்தை ரிசர்வ் செய்யும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ’சுல்தான்’ படத்தை பார்க்க ஏஜிஎஸ் திரையரங்குகளில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்தால் உணவு பொருட்கள் 50% சலுகை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ஏஜிஎஸ் திரையரங்குகளில் பலர் சுல்தான் படத்திற்கான டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இந்த படம் கார்த்தியின் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் ட்ரெய்லருக்கு பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே