1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified செவ்வாய், 30 மார்ச் 2021 (17:01 IST)

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த கட்ட வியாபார பாய்ச்சல்!

ஏஜி எஸ் நிறுவனம் அடுத்ததாக தமிழ் சினிமா விநியோகத்தில் முழுவதுமாக இறங்கப் போவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கார்ப்பரேட் ஸ்டைலில் படம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஏஜிஎஸ் நிறுவனமும் ஒன்று. கடைசியாக விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை தயாரித்தது. ஆனால் அந்த படத்தில் அவர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று சொல்லி விஜய்யிடம் மீண்டும் ஒரு படத்துக்கு தேதிகள் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை விஜய் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என  சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சினிமா விநியோகத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் கால்பதிக்க உள்ளதாம். விரைவில் ஒரு பிரம்மாண்ட பட்ஜெட் படத்தினை வாங்கி தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்ய உள்ளதாம்.