தொடர்ந்து அசிங்கப்படும் மீரா இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா?

Last Updated: வெள்ளி, 26 ஜூலை 2019 (12:45 IST)
பிக்பாஸ் நிகச்சியில் கடந்த இரண்டு நாட்களாக கிராமத்து கெட்டப்பில் போட்டியாளர்கள் அனைவரும் புது புது டாஸ்க்களை செய்து பார்வையாளரை பரவசப்படுத்தி வந்தனர். 


 
இன்று அனைவரும் தங்களது இயல்பான நிலைக்கு மாறியுள்ளனர். தற்போது கிராமத்து கெட்டப்பில் இருந்த போட்டியாளர்களில் யார் டாஸ்க்கை சரியாக செய்ததோ அவர்களை தேர்தெடுத்து பெஸ்ட் பிளேயர் பட்டத்தை கொடுங்கள் என்று கூறினார். 
 
இதையடுத்து ஒவ்வொருத்தராக தங்களது அபிப்பிராயத்தை சொல்ல, மீரா மிதுன் சரியாக விளையாடியதாக ரேஷ்மா கூறுகிறார். இதனை கேட்டவுடனே மதுமிதா கோபத்துடன், கொடுக்கப்பட்ட டாஸ்க்களை பெர்சனலாக எடுத்துக்கொண்டு அடிக்கடி பிரச்சனை செய்தது மீரா மிதுன் தான்.  அப்படியிருக்க நீங்கள் எப்படி அவர் பெஸ்ட் பிளேயர் என சொல்கிறீர்கள் என்று கேட்க பிரச்சனை வெடித்தது.
 
இதில் சேரனும் மதுமிதாவுக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் மது தான் சரியாக விளையாடினார் அவருக்கு தான் பெஸ்ட் பிளேயர் பட்டத்தை கொடுக்கவேண்டும் என கூறுகிறார். ஆக இந்த பெஸ்ட் பிளேயர் பட்டம் யாருக்கு போய் சேருகிறது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்துக்கொள்வோம். 
 


இதில் மேலும் படிக்கவும் :