எங்க மாவட்டம்தான் ஃபர்ஸ்ட்டு..! – சீன் போட்ட சதீஷ் மூக்கை உடைத்த சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (12:24 IST)
அழகான ஆண்கள் உள்ள மாவட்டம் என காமெடி நடிகர் சதீஷ் போட்ட ட்வீட்டுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் சதீஷ். சினிமாக்களில் ஹீரோக்களை வம்பிழுத்து காமெடி செய்வது மட்டுமல்லாமல் ட்விட்டரிலும் அவ்வபோது நடிகர்களிடம் வாண்ட்டடாக சென்று வம்பிழுப்பது, நகைச்சுவை ட்வீட்கள் போடுவது இவருக்கு பொழுதுபோக்கு.

சமீபத்தில் அப்படியாக பதிவிட்ட அவர் சமீபத்தில் தமிழகத்தில் அழகான ஆண்கள் அதிகம் உள்ள மாவட்டம் குறித்து லயோலா காலேஜ் நடத்திய ஆய்வில் அழகான ஆண்கள் அதிகம் உள்ளதாக சதீஷின் சொந்த ஊரான சேலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒரு ஆதாரமில்லாத பார்வேர்டு மெஸேஜை பதிவிட்டிருந்தார்.

அவரது ட்வீட்டுக்கு அவரை கலாய்க்கும் விதமாக பதிலளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் ”இந்த கருத்துகணிப்பு நீங்க சென்னைல செட்டில் ஆனதும் நடத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்புறம் அதுனாலதான் சென்னை முதலிடம் பெறவில்லை என்பதையும் நீங்க புரிஞ்சிக்கணும்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :