சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்!

sasikumar
சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்!
siva| Last Modified வியாழன், 29 அக்டோபர் 2020 (18:04 IST)
சசிகுமார் நடிப்பில் இயக்குனர் கதிர்வேலு என்பவர் இயக்கிய ராஜவம்சம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது
இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்சாருக்கு அப்ளை செய்தனர்

இந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து சற்று முன்னர் யு சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து திரை அரங்குகள் திறந்த உடன் வெளியாகும் முதல் படமாக ராஜவம்சம் இருக்கும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன
சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் சதீஷ், யோகிபாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி, ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை டிடி ராஜா தயாரித்துள்ளார்.
சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்!இதில் மேலும் படிக்கவும் :