திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (14:25 IST)

கணவரை பிரிகிறாரா சசிக்குமார் பட நடிகை?

தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு கம்பெனி புரரெக்டக்சன் சார்பில் சசிக்குமார் இயக்கி, தயாரித்து நடித்த படம் சுப்பிரமணியபுரம்.

இப்படத்தின் ஹீரோவாக ஜெய் நடித்தார். இவருக்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார். வில்லனாக சமுத்திரகனி நடித்திருந்தார். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.  இப்படம்  ரூ.65 லட்சத்தில் தயாரிக்கப்பட்டு  ரூ.30 கோடி வசூலீட்டியதாக கூறப்படுகிறது.

இப்படடத்தில் ஹீரோயினாக அறிமுகமான  சுவாதிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.  இப்படத்தை அடுத்து, 'கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

இவர், விகாஸ் வாசு என்ற விமானியைக் காதலித்து கடந்த  2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், நடிகை சுவாதி தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கியதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல், இவர் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.