ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (18:05 IST)

சூரரைப் போற்று திரைப்படத்தில் எனது ஏமாற்றம் – பிரபல விநியோகஸ்தர் டிவீட்!

சூரரை போற்று திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம் என பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் தெரிவித்துள்ளார்.

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 12 (நாளை )ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. காட்சிகளாக மட்டுமில்லாமல் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கூட ரசிகர்கள் ரசிக்கும் விதமாக உள்ளன.

இந்நிலையில் படத்தை திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு போட்டுக் காட்டி வருகிறார் சூர்யா. அதில் படத்தை பார்த்த விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் ‘இயற்கையின் சதியால் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை என்பது ஒன்றே ஏமாற்றம். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இப்போது தயாரித்து வரும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு எனது வாழ்த்துகள். ரசிகனாக விசிலடித்து விரைவில் வெள்ளித்திரையில் காண ஆவலாக உள்ளேன் ‘ எனக் கூறியுள்ளார்.