1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (18:30 IST)

"மூக்குத்தி அம்மன்" படத்தின் கலக்கலான காமெடி ஸ்னீக் பீக்!

காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாராகியுள்ள படம் மூக்குத்தி அம்மன். காமெடி டிராமா ரக படமான இதற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல திரைப்படங்கள் ஓடிடிக்கு விற்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் "ஆடி குத்து" மற்றும்  "பகவதி பாபா" என்ற இரண்டு பாடல் வீடியோ வெளியாகியது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் காமெடி ஸ்னீக் பீக் காட்சி ஒன்று யூடியூபில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்து வருகிறது. இதோ அந்த காமெடி காட்சி வீடியோ.