திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மார்ச் 2021 (14:54 IST)

கபிலன், ரங்கன் வாத்தியார், மாரியம்மாள்..! – சார்பட்டா பரம்பரை கதாப்பாத்திரங்கள் அப்டேட்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களின் பெயர்கள் குறித்த முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்கி வரும் படம் சார்பட்டா. இந்த படத்தில் நாயகனாக ஆர்யா நடித்துள்ளார். இந்த படம் குத்துச்சண்டையை மையப்படுத்திய படம் என்பதால் இதற்காக ஆர்யா பிரத்யேகமாக உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோக்கள் முன்னதாக வெளியாகி ட்ரெண்டாகி இருந்தன.

இந்நிலையில் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் பற்றிய முன்னோட்ட வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆர்யா கபிலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியான துஷாரா விஜயன் மாரியம்மாள் என்ற கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர். இதுதவிர பசுபதி – ரங்கன் வாத்தியார், ஜான் கொக்கன் – வேம்புலி, கலையரசன் – வெற்றி செல்வன், சந்தோஷ் – ராமன், காளி வெங்கட் – கோனி உள்ளிட்ட பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.