1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மார்ச் 2021 (09:37 IST)

பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா உறுதி! – தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்!

சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சொமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சினிமா பிரபலங்களும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மிலிந்த் சோமன். சினிமா மட்டுமல்லாது மாரத்தான் ஓட்டம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றிலும் பலருக்கு பயிற்சி வழங்கி வந்த மிலிந்த் சோமனுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமீர் கானை தொடர்ந்து மிலிந்த் சோமன் உள்ளிட்ட நடிகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.