பா ரஞ்சித் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Last Modified வெள்ளி, 15 ஜனவரி 2021 (15:19 IST)

சார்பட்டா பரம்பரை படத்தின் அடுத்த கலக்கலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

காலா படத்தின் வெளியீடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது.

இந்த படம் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :