திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 22 ஜூலை 2021 (19:54 IST)

''சார்பாட்டா'' இந்தியாவில் சிறந்த படம் - பிரபல இயக்குநர் புகழராம்

இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள சார்பாட்டா படம் குறித்து பிரபல இயக்குநர் இது இந்தியாவில் சிறந்த படம் என்ப புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் வரும் ஜூலை 22 ஆம் தேதி ’சர்பாட்டா பரம்பரை’ என்ற படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவித்தார்,.

அதன்படி இன்று சார்பாட்டா படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது., திரைத்துறையினர் ஆர்யா உடலை வருத்தி நடித்ததற்கு பாராட்டுகள் வாழ்த்துகளும் தெரிவித்தனர். அதேபோல் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் இப்படம் முத்திரை பதித்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமேசானில் வெளியாகியுள்ள சார்பாட்டா படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் தியேட்டரில் வெளியாகாதது வருத்தம் அளிக்கிறது. ரஞ்சித் இயக்கியுள்ள படங்களிலேயே இதுதான் சிறந்த திரைப்படம். இந்திய சினிமாவிற்கு  சிறந்த படத்தைத் தந்துள்ள பா,.ரஞ்சித்திற்கு அன்பான வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.