திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (17:29 IST)

’சார்பாட்டா பரம்பரை’ வெற்றியால் சோகமான கார்த்தி ரசிகர்கள்!

நடிகர் ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த வெற்றியின் காரணமாக கார்த்தியின் ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக தெரிகிறது
 
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கார்த்தி என்றும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் திடீரென அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து ஆர்யாவை தொடர்பு கொண்டு இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தார் என்றும் தற்போது அந்த படம் ரிலீசாகி மிகப் பெரிய வரவேற்பும் வெற்றியும் பெற்று உள்ள நிலையில் கார்த்தி இந்த படத்தை மிஸ் செய்து விட்டாரே என அவரது ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சோகமாக பதிவு செய்துவருகின்றனர்
 
கார்த்தி என்ன காரணத்திற்காக இந்த படத்தை மிஸ் செய்தார் என ரசிகர்களுக்கு தெரியாவிட்டாலும் ’மெட்ராஸ்’ வெற்றிக்கு பிறகு அவர் இந்த படத்தை கண்டிப்பாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும் என்றும் செய்தது அவருடைய தவறு தான் என்றும் அவர்கள் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது