வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (17:03 IST)

என் வெற்றிக்குக் காரணம் அஜித்தான்… சார்பட்டா வில்லன் நெகிழ்ச்சி!

சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லனாக நடித்த வேம்புலி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

நடிகர் ஜான்கொக்கனுக்கு சார்பட்டா பரம்பரையில் அவர் நடித்துள்ள வேம்புலி கதாபாத்திரம் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனது வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

இது சம்மந்தமாக ‘நன்றி அஜித் சார். நான் வீரம் படப்பிடிப்பின்போது உங்களுடன் செலவிட்ட நேரம் மிகவும் மதிப்பானது. நீங்கள்தான் என் மீது எனக்கு நம்பிக்கை வரக் காரணமாக இருந்தீர்கள்.  ஒவ்வொரு நாளும் கடின உழைப்பைச் செலுத்த நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். இந்த கதாபாத்திரத்தை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.