செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (14:33 IST)

மரண மாஸ் பாடல் காப்பி அல்ல, அப்படியே தூக்கிய அனிருத்! வீடியோவை பாருங்கள்

டிசம்பர் 3ம் தேதி சமூக வலைதளங்களில் அதிரவைத்தது சூப்பர் ரஜினியின் பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரணமாஸ்.  இந்த பாடலின் சிங்கிள் டிராக் தரலோக்கலாக சென்னை தமிழில் இருந்ததால் கேட்டவுடன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது,

இன்றும் யூடியூபில் நம்பர் 1 டிரண்டிங்கில் மரணமாஸ் பாடல் தான் உள்ளது.
 
இப்படி ஒரு மாஸ் பாடலை அனிருத் இசையமைத்துள்ளதை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகிறார்கள்.ஒடிசாவை சேர்ந்த இசைகலைஞர்கள்தான் இந்த 
டியூனை தயார் செய்து வாசித்துள்ளனர்.
 
அதே இசை தான் இப்போது பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலாக அமைந்துள்ளது அனிருத் அந்த கலைஞர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அவர்களது பெயர்களை வீடியோவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை பாருங்கள்.