1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (16:28 IST)

'சர்கார்' படத்தின் அடுத்த டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் படத்தின் டீசர் கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி உலக அளவில் பல சாதனைகளை இந்த டீசர் முறியடித்து விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்தது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 'சர்கார்' படத்தின் அடுத்த டீசர் வெளியாகவுள்ளது. இந்த தகவலை சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த டீசர் 'சர்கார்' படத்தின் தெலுங்கு டீசர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தை போல ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் விஜய்க்கு பெரும் அளவு ரசிகர்கள் இருப்பதால் தமிழ் டீசரை போலவே தெலுங்கு டீசரும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல்  சர்கார் திரைப்படம் தமிழை போலவே தெலுங்கிலும் தீபாவளி அன்றே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.