வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 2 அக்டோபர் 2018 (11:38 IST)

கதிரை அழைத்து பாராட்டிய விஜய்!

பரியேறும் பெருமாள்படத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை அறிந்த விஜய், அந்த படத்தின் ஹீரோ கதிரை பாராட்டி இருக்கிறார்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த  திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

சமூக வலைதளத்தில் இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இது விஜய்யின் தகவலுக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக கதிரைத் தொடர்பு கொண்டு விஜய் பேசியிருக்கிறார்.

இது குறித்து கதிர் கூறும்போது, ‘ஜெகதீஷ்க்கு போன் செய்து, தம்பி கதிர் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் சொல்லிவிடு என்று சொல்லியிருக்கிறார். அப்போது நானும் ஜெகதீஷுடன் தான் இருந்தேன். உடனே இங்க தான் கதிர் இருக்கிறான். நீங்களே சொல்லிவிடுங்கள் என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார்.

அப்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிகிட்டு இருக்காங்க. நல்லா இருக்குன்னு சொல்றாங்க. கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுகிறார்கள் என்றால் மிகப்பெரிய வெற்றி. இந்த சந்தோஷத்தை கொண்டாடு. இன்னும் நான் படம் பார்க்கவில்லை. சீக்கரமே பார்த்துட்டு கூப்பிடுறேன் என்று என்னிடம் சொன்னார். விஜய் சொன்னவுடனே ஒட்டுமொத்த ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது'' என்றார்.