வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (17:27 IST)

நீங்க தான் எனக்கு எல்லாம்... மாதவனுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி சரிதா!

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என இன்றளவும் இளம் பெண்களை தன் அழகினால் வசீயம் செய்பவர் நடிகர் மாதவன். இவர்  2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 
 
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் திரைப்பட வாழ்க்க்கைக்கு இந்த திரைப்படங்கள் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. அதை தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
இவர் 1999ல் சரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் மாதவனின் பிறந்தநாளுக்கு ரொமான்டிக் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள மனைவி சரிதா பல நினைவுகள் கொண்ட அழகிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஹேப்பி பர்த்டே மை லவ், பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே நீங்கள் எங்கள் உலகம்- சிறந்த கணவர் சிறந்த தந்தை சிறந்த மகன் & மருமகன். எங்களுக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. என கூறி வாழ்த்தியுள்ளார்.