நேரடியாக கலர்ஸ் தமிழில் வெளியாகும் கதிர் மற்றும் சூரியின் படம்!
கதிர் மற்றும் சூரி நடிப்பில் உருவான திரைப்படமான சர்பத் கலர்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
கதிர் மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் பிரபாகரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சர்பத். எல்லா வேலைகளும் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக இருந்தாலும், கொரோனா லாக்டவுன் காரணமாக இன்னமும் ரிலீஸாகாமல் உள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கலர்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக ரிலீஸாகவுள்ளதாம்.