1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சுவையான மீன் மஞ்சூரியன் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
மீன் துண்டுகள் - 1/2 கிலோ
சோளமாவு, மைதா - தலா 25 கிராம்
முட்டை - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப
வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 5
சோயா சாஸ் - தேவைக்கு ஏற்ப
தக்காளி சாஸ் - தேவைக்கு ஏற்ப
வெங்காயத்தாள் - தேவைக்கு ஏற்ப.

செய்முறை::
 
கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, முட்டை, உப்பு  சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
 
ஊறவைத்த மீனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

கடைசியாக அதில் கொத்தமல்லி, வெங்காயத்தாள்  போட்டு சூடாக பரிமாறவும். சூப்பரான மீன் மஞ்சூரியன் தயார்.