செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (07:41 IST)

சரவணன் திடீர் வெளியேற்றம்: இதுவரை நடைபெறாத புதுமை

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஞாயிறு அன்று மட்டுமே ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். மனநிலையில் பிரச்சனை ஏற்பட்டதால் முதல் சீசனில் மட்டும் ஓவியா இடையில் வெளியேற்றப்பட்டார். அதுவும் அவராகவே வெளியேற விரும்பியதால் பிக்பாஸ் குழுவினர்களால் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சேரன், மீராமிதுன் விவகாரம் குறித்த விவாதத்தின்போது சரவணன், விளையாட்டாக தானும் பேருந்தில் செல்லும்போது பெண்களை இடித்திருப்பதாக கூறினார். இவர் ஜாலியாக கூறிய இந்த விஷயம் பெரும் பிரச்சனையாகியது. பல பெண்கள் அமைப்புகள், சமூக சேவர்கள் சரவணனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் சரவணனை அழைத்து பெண்கள் விஷயத்தில் நீங்கள் கூறிய விஷயம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளதால் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தொடர முடியாது என்றும், எனவே வெளியேற்றப்படுகிறீகள் என்றும் அறிவித்தார். இந்த விஷயத்திற்காக சரவணன் மன்னிப்பு கோரியபோதும் பிக்பாஸ் குழுவினர் இந்த சம்பவத்தை எளிதாக எடுத்து கொள்ள முடியாது என்பதால் சரவணன் வெளியேற்றப்பட்டதாக பிக்பாஸ் கூறினார். பின்னர் கன்ஃபக்சன் அறையின் இன்னொரு பக்கத்தில் இருந்து சரவணன் வெளியேறினார். சரவணன் வெளியேறியதை அறியாத மற்ற போட்டியாளர்களின் நிலை என்ன? என்பது இன்றைய புரமோவில் அல்லது நிகழ்ச்சியில் தெரியும்