செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:44 IST)

பிக்பாஸ் பொருளை சேதப்படுத்திய முகன்! பிக்பாஸ் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகன் ராவ் சாக்ஷியுடன் நெருங்கி பயகியதால் அபிராமிக்கு பிடிக்காமல் சீன் கிரியேட் செய்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து முகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதனால் ஒரு கட்டத்தில் கோபத்தை அடக்கமுடியாத முகன் கட்டிலை உடைத்து நொறுக்கினார். 


 
பிக்பாஸ் வீட்டின் விதிமுறைப்படி உள்ளிருக்கும் எந்த பொருளையும் சேதப்படுத்தக்கூடாது என்பது தான்.  அப்படியிருந்தும் முகென் வீட்டின் பொருளை சேதப்படுத்தியதால் தற்போது அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாம். 
 
போட்டியாராக வீட்டில் நுழையும்  போதே இதையெல்லாம் சொல்லி  அனுப்பியும் கூட முகென் வேண்டுமென்றே பிக் பாஸ் பொருளை சேதப்படுத்தியதால் அவரிடமிருந்து தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முகென் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.