திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:13 IST)

”பீஸ்ட் படத்துல நான்…” தன் கதாபாத்திரம் பற்றி அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

பீஸ்ட் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார்.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை பீஸ்ட் திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் ஒரு ரசிகர் பீஸ்ட் படத்தில் உங்கள் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்று கேட்டதற்கு பதிலளித்துள்ள்ளார். புஜா வெளியிட்டுள்ள வீடியோவில் ‘பீஸ்ட்டில் என் கதாபாத்திரத்தின் பெயர் ப்ரீத்தி’ என அறிவித்துள்ளார்.