1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:42 IST)

நாளை தமிழகத்தின் ஒரு நகரில் மட்டும் பீஸ்ட் ரிலீஸ் இல்லை: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

beast
நாளை தமிழகத்தில் ஒரு நகரில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகம் முழுவதும் நாளை பீஸ்ட் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் கரூரில் மட்டும் ரிலீஸ் ஆகாது என கரூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்
 
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகிஸ்தர் சங்கம் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது 
இருப்பினும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்று இரவுக்குள் சுமூக முடிவு ஏற்பட்டு நாளை பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்