வெள்ளி, 1 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (16:05 IST)

வெளிநாடுகளில் பீஸ்ட் படத்தின் டிக்கெட் ரேட் இவ்வளவா? அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

விஜய்யின் அடுத்த படமான பீஸ்ட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

விஜய்யின் பீஸ்ட், திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் கிடைத்துள்ளதாகவும், கே.ஜி.எப்2  படத்திற்கு அதிகபட்சமாக 200 திரையரங்குகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்துக்காக சிறப்புக் காட்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிறப்புக் காட்சிகளில் காலைக் காட்சி மட்டும் இல்லாமல் நள்ளிரவுக் காட்சிகளும் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நள்ளிரவுக் காட்சிகளுக்கு சுமார் 2000 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது பீஸ்ட் படத்தின் வெளிநாட்டு காட்சிகளுக்கான டிக்கெட் ரேட் இந்தியாவை விட அதிகமாக உள்ளதாம். அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இந்திய மதிப்பில் 3000 ரூபாயைக் கூட தாண்டுகிறதாம். இந்தியாவை விட வெளிநாடுகளில் டிக்கெட் ரேட் அதிகமாக இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.