வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:32 IST)

“விஜய்தான் சூப்பர் ஸ்டார் என அப்பவே சொன்னேன்…” – சரத்குமார் பேச்சு!

வாரிசு படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தபடத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசினர். அப்போது பேசிய சரத்குமார் “சூர்யவம்சம் படத்தின் 175 ஆவது நாள் விழாவில் பேசும் போது விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நான் சொன்னேன். அப்போது அதைக் கேட்ட கலைஞரே வியந்தார். இப்போது விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். நான் அன்று சொன்னது இன்று பலித்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.