1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (16:58 IST)

அஜித் படத்தால் வாய்ப்புகளை இழந்தேன்… கனிகா சொன்ன அதிர்ச்சி கருத்து!

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் அவரின் உதவியாளர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவான பைவ்ஸ்டார் திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கனிகா. அதன் பின்னர் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். ஒரு கட்டத்தில் அவர் தனக்கான வாய்ப்புகளை இழந்த நிலையில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார்.

அதையடுத்து மீண்டும் நடிப்புக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ள கனிகா எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வருகிறார். ஆனால் சமூகவலைதளங்களில் அவர் மாடர்ன் உடையில் வெளியிடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “தமிழில் நான் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த போது வரலாறு படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடித்ததால் தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.