வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 ஜூன் 2023 (14:22 IST)

சினிமாவில் 20 ஆண்டுகளைக் கடந்த ஜெயம்ரவி … நெகிழ்ச்சிப் பதிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் வெற்றியால் ‘ஜெயம்’ ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி பேராண்மை, தனி ஒருவன் பாராட்டத்தக்க படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்போது  ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவரின் முதல் படம் 2003 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸானது.

இப்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து ” என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் நான் மிகுந்த நன்றியுணர்வு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான இதயத்தை உணர்கிறேன். எனது ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள், சக நட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் எப்போதும் எனது குடும்பத்தினரின் நிலையான அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். சிறந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுடன் நான் பணிபுரியும் பாக்கியம் கிடைத்தது, உங்கள் படைப்புகளை என்னிடம் ஒப்படைத்து, உங்கள் கதைகளை உயிர்ப்பிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.