இந்தியில் ரீமேக் ஆகும் தி கிரேட் இந்தியன் கிச்சன் – முன்னணி நாயகி ஒப்பந்தம்!
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இயக்குநர் ஜோ பேபி இயக்கிய த கிரெட் இந்தியன் கிச்சன் திரைப்படம் Neestream தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மொழி தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் தமிழில் அதில் பெயரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஆர் கண்ணன் ரீமேக் செய்துள்ளார்.
பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்த இந்த படம் இப்போது ஜப்பானிய மொழியிலும் வெளியானது. இந்நிலையில் இந்த படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சான்யா மல்ஹோத்ரா மலையாளத்தில் நிமிஷா நடித்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.