1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:35 IST)

கர்ணன் படத்தின் வேலைகளை தொடங்கிய சந்தோஷ் நாராயனன்!

கர்ணன் படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை சந்தோஷ் நாராயணன் தொடங்கியுள்ளாராம்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின்  பின்னணி இசைக்கான பணிகளை இப்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தொடங்கியுள்ளாராம். படத்தின் பின்னணி இசையில் பறையிசை முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.