வியாழன், 30 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified புதன், 8 பிப்ரவரி 2023 (17:24 IST)

'ஏகே 62’ படத்தில் அனிருத்துக்கு பதில் இவர் தான் இசையமைப்பாளரா?

Ajith 62
அஜித் நடிக்க இருக்கும் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அனிருத் இசையமைப்பாளர் என்றும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து வெளியேறி விட்டதால் அனிருத்தும் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதில்லை என தெரியவந்துள்ளது. 
 
இந்த நிலையில் ’ஏகே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அஜித் படத்திற்கு முதல் முதலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த முறையான அறிவிப்பை லைகா நிறுவனம் இன்னும் ஒரிரு நாளில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran